ஆவடி ராணுவ வாகன இன்ஜின் ஆலையில் அப்ரன்டிஸ்

பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பிரிவுகள்:
(Mechanical Engineering, Automobile Engineering, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering, Civil Engineering, Computer Science and Engineering/Information Technology/Mechatronics/ Production Engineering.)

பயிற்சிகள்:
1. Graduate Apprentice (Engineering): 50 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
2. Non- Engineering Graduate Apprentice: 12 இடங்கள். தகுதி; கலை/அறிவியல் பிரிவைச் சேர்ந்த ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. Technician Apprentice: 20 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரிகளுக்கு ரூ.9 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும். 2020,2021, 2022,2023ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் தங்களின் தகுதி பற்றிய விவரங்களை ஆக.31க்கும் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List ஐ கிளிக் செய்து, அதிலிருந்து இன்ஜின் பேக்டரி, ஆவடியை தேர்வு செய்து, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பட்டப்படிப்பு/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் www.boat-srp.com என்ற இணையதளத்தில் செப்.6ம் தேதி வெளியிடப்படும். நேர்முகத் தேர்வு செப்.18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!