ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் டிசைன் இன்ஜினியர்

1. Design Engineer (Mechanical): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). சம்பளம்: ரூ.50,000. வயது: 45க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
2. Senior Design Engineer (Mechanical): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.60,000. வயது: 45க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Senior Design Engineer (Electrical): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.60,000. வயது: 45க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் அல்லது டிடியாக செலுத்த வேண்டும். டிடி எடுக்க வேண்டிய பெயர்: Armoured Vehicles Nigam Limited, Chennai. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.avni.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2024.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை