ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆவடி: ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று காலை மேயர் உதயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திமுக கவுன்சிலர் ஆசிம் ராஜா (4வது வார்டு) பேசும்போது, மிட்னமல்லி வண்ணான்குளத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு முறையான ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு இருப்பின் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.மேலும், கூட்டத்தில் கவுன்சிலர்கள், மழையால் சேதமடைந்த சாலை, நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லை, தங்களது வார்டு குறைகள் குறித்து அதிகம் பேசினர்.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்