ஆவடியில் உள்ள கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

ஆவடி: ஆவடியில் உள்ள கோயிலில் உண்டியல் பணம் திருட்டப்பட்டுள்ளது. ஆவடியில் உள்ள ஜே.பி.எஸ்டேட்டில் புகழ் பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி(53) என்பவர் கோயில் அறங்காவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், அறங்காலவலர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில், வழக்கம் போல் செல்லியம்மன் கோயில் கிரில் கேட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும், மறுநாள் காலை 5 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது, கோயிலின் முன்பக்கம் கிரில் கேட் உடைக்கப்பட்டு, உண்டியலை உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதைக் கண்ட வேலுமணி அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல், ஆவடி கோவர்த்தனகிரி நகர் பகுதியில் அமைந்துள்ளது கங்கை அம்மன் கோயில் இதன் வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.2000 பணத்தை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்த, புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு