தலைமை செயலாளர் கார் மீது ஆட்டோ மோதி விபத்து

துரைப்பாக்கம்: மெரினா காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கார், கோட்டை நோக்கி சென்றது. ராணி மேரி கல்லூரி அருகே சென்றபோது, அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற ஆட்டோவின் அச்சு திடீரென உடைந்து, முன்னால் சென்று கொண்டிருந்த தலைமை செயலாளர் காரின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் பம்பர், மட்கார்டு, இடது பக்க பின்புற கதவு சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்களுக்கு யாரும் காயம் ஏற்படவில்லை. காரில் தலைமை செயலாளர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை செயலாளர் கார் டிரைவரான கே.கே.நகர் 11வது தெரு 2வது பிரிவு பகுதியை சேர்ந்த வீரச்சந்திரன் (41) அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்