ஆட்டோவில் கஞ்சா விற்ற 4 பேர் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோவில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூலக்கடை மேம்பாலம் அருகே சென்ற ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் சிறு சிறு பொட்டலங்களாக ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு ஆட்டோவில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (31) மற்றும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி பி.வி காலனி பகுதியைச் சேர்ந்த அப்புன் என்கின்ற கலைச்செல்வன் (34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சையத் முஷ்ரப் (23) என்பதும் தெரிந்தது. மேலும், நேற்று அவர்களையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாதவன், தினேஷ், கலைச்செல்வன், சையத் முஷ்ரப் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை