ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சோலார் கார் பந்தயம்; 40 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலில் சீறிப்பாய்ந்த சோலார் கார்கள்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சோலார் கார் பந்தயம் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. டார்வின் நகரில் இருந்து அடிலேட் நகர் வரை நடைபெற்ற பந்தயத்தில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. பல்கலைக்கழக மாணவர்களும் தாங்கள் வடிவமைத்த சோலார் கார்களுடன் இதில் பங்கேற்றனர். 40 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலில், அடர்ந்த வனப்பாதை, பாலைவனம், கரடு முரடான வழிகள் என சவால் நிறைந்த பாதைகள் வழியாக பயணம் அமைந்தது.

கல்லூரி மாணவர்கள் குறைந்த எடை கொண்டதாக வடிவமைத்த சூரிய மின்சக்தியில் இயங்கும் கார்கள் சீறிப்பாய்ந்தன. 5 நாட்கள் நடைபெற்ற பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தாத கார்களின் பந்தயம் சூரிய மின்சக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்தது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா