ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவனுக்கு கத்திக்குத்து

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவனையும் அவரது நண்பரையும் மர்மநபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் ரியான் சிங்(16). அங்கு உள்ள பள்ளியில் படித்து வரும் ரியான் சிங்கும் அவரது நண்பர்களும் கடந்த வியாழனன்று கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ரியான் சிங்கிடம் இருந்த செல்போனை தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுக்கவே ரியான் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர். அவரது நண்பர்களையும் தாக்கிய கும்பல் அவர்களிடம் இருந்த செல் போன்களை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர். ரியான் சிங்குக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ரியான் சிங்கின் தாயார் கூறுகையில்,‘‘ ரியன் சிங்குக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகளை செய்திருந்தோம். அவர் மீது நடந்த கத்திகுத்து தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சியுற்றோம்’’ என்றார்.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு