தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் ஆஸி. அபார வெற்றி

டர்பன்: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 டி.20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி டர்பனில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் மிட்செல் மார்ஷ் நாட் அவுட்டாக 92 (49 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), டிம்டேவிட் 64 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். 20 ஓவரில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 56(43பந்து), வான் டெர் டுசென் 21, மார்கோ ஜான்சன் 20 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். பவுமா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், தப்ரைஸ் ஷம்சி டக்அவுட் ஆனார்கள். 15.3 ஓவரில் தென்ஆப்ரிக்கா 115 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 111 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி.20 போட்டி நாளை நடக்கிறது.

 

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு