ஆடி கியூ8 இ-டிரான்

ஆடி நிறுவனம், கியூ8 இ-டிரான் என்ற காரை இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ள முழுமையான எலக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த காரில் இதுவரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய மோனோகுரோம் 2டி ஆடி லோகோ இடம் பெற்றுள்ளது.16 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங்க் அண்ட் ஒலூப்சன் சவுண்ட் சிஸ்டம், மசாஜ் அம்சத்துடன் கூடிய முன்புற சீட்கள், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் 114 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இதில் உள்ள டூயல் மோட்டார் 408 எச்பி பவரையும், 664 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆல்வீல் டிரைவ் கொண்டதாக இது வருகிறது.

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்