ஆடி மற்றும் தீ மிதி திருவிழா மஹா உற்சவம்

மஹா தேவ்யா மஹா காளி மஹா மாரீ ஸ்வருபயா
ஸைவ காலே மஹா மாசி ஸைவ ஸ்ருஷ்டிர் பவத்யஜா

காஞ்சி மாவட்டம் பழவந்தாங்கல், நங்கநல்லூர் கிராமத்தில் வீரமாமுனிவர் தெருவில் உள்ள கோயிலில் குடி கொண்டு அருள்பாலித்து வரும். கிராம தேவதை, “அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மனுக்கு’’ நிகழும் சோபகிருது வருடம் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஆடி மாதம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் திருவிழா நடைபெற இருக்கிறது.

11.08.2023 அன்று கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கி கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், அம்மனுக்கு விசேஷ அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.

13.08.2023 அன்று காலை விசேஷ பால்குட அபிஷேகம், கூழ் வார்த்தல், மாலையில் தீ மிதி திருவிழா, இரவு 9.00 மணியளவில் அம்மன் திருத்தேரில் வீதி உலா புறப்பாடு நடைபெறும்.

பக்தகோடிகள் அனைவரும் இத்திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஸ்ரீஊத்துக்காட்டம்மனுக்கும், ஸ்ரீபனச்சியம்மனுக்கும் நடைபெறும் ஆடித் திருவிழாவிலும், கலந்துகொண்டு, “அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன்’’ அருளைப் பெற்று வாழ வேண்டுகிறோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!