ஆடி திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் வருடாந்திர ஆடிப் பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. அப்போது கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் உருமி, மேளம் முழங்க இசை வாத்தியங்களுக்கு ஏற்றவாறு திரியாட்டம், நடனமாடி அருள்வாக்கு கூறினர்.

தொடர்ந்து, நேற்று பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி கிராம தெய்வம், கருப்பண்ணசுவாமி கோயில்களுக்கு ஊர்வலமாக சென்றனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் முன்பு முளைப்பாரியை இறக்கி வைத்து கும்மியாட்டம், நடனமாடி பெண்கள் வழிபாடு செய்தனர்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு