ஆடி கியூ7 போல்ட் எடிஷன்

ஆடி நிறுவனம் கியூ3 மற்றும் கியூ3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன்களைத் தொடர்ந்து, கியூ 7 போல்ட் எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிஷனான இது கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டள்ளது. முன்புற கிரில், ஆடி லோகோ முழுவதும் கருப்பு நிறத்தில் அமைந்துள்ளன. காரின் பின்புறமும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 3 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆட்டோ, கம்போர்ட், டைனமிக், ஆப் ரோடு உட்பட 7 டிரைவில் மோட்கள் உள்ளன. காரின் இன்டீரியரில் மாற்றம் இல்லை. 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 19 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.97.84 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து