ஆடி கியூ5 போல்ட் எடிஷன்

ஆடி கியூ 5 போல்ட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி லோகோ, விண்டோ சரவுண்டிங், முன்புற கிரில்கள், ரூஃப் ரெயில்கள், விங் மிரர்கள் ஆகியவை பளபளப்பான கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் 2. 5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 265 எச்பி பவரையும் 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6. 1 நொடிகளில் எட்டும் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 10 புள்ளி ஒரு அங்குல தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 19 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங்க் அண்ட் ஒலூஃபன் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.72.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியூ 5 வரிசையில் டாப் வேரியன்டை விட இது சுமார் ரூ.1.5 லட்சம் அதிகம். லிமிடெட் எடிஷனாக வெளியாவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்