பறிமுதல் வாகனங்கள் ஏலம்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு 6 சக்கர வாகனம், 10 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனம் மற்றும் 57 இரண்டு சக்கர வாகனங்கள் என 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) அருகே பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இந்த பொது ஏலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, சென்னை மண்டல காவல்துறை எஸ்பி (அமலாக்கம்) ஆகியோர் தலைமையில், மாவட்ட (பொறுப்பு) கூடுதல் எஸ்பி (தலைமையிடம்), காஞ்சிஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. மேற்படி வாகனங்களை வரும் 20ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், வரும் 21ம் தேதி முதல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி அலுவலகத்தில் ரூ.1000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்