2024 தேர்தலில் கவனம் தேவை காங்கிரசுக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எச்சரிக்கை

மும்பை: காந்தி குடும்பத்தினரை சுற்றியுள்ளவர்கள் செய்யும் அரசியல் மோடி, அமித்ஷாவுக்கு சாதகமாகும் வாய்ப்புள்ளதால் காங்கிரஸ் கட்சி கவனமுடன் செயல்பட வேண்டும் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே தலைவர் சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள தலையங்கத்தில், ‘’மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 199 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால், தேர்தல் முடிவு அதற்கு மாறாக வந்தது.

எனவே, மின்னணு வாக்கு இயந்திரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. காந்தி குடும்பத்தினரை (ராகுல், சோனியா) சுற்றியுள்ளவர்கள் செய்யும் அரசியல், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் சாதகமாக இருந்தால், வரும் மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆபத்தானதாக முடியும்; எச்சரிக்கை தேவை. மோடியின் மாயவித்தை 3 மாநில தேர்தலில் பலித்தது. ஆனால், தெலங்கானாவில் எடுபடவில்லை. காங்கிரசால் மோடியை தோற்கடிக்க முடியாது என்பது கட்டுக்கதை. கடந்த 2018ல், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜவை வென்றுள்ளது,’’ என்று கூறியுள்ளார்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!