கூர்மையான ஆயுதத்தால் பாஜக பெண் அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி

குஷிநகர்: பாஜக பெண் அமைச்சர் சென்ற கார் மீது சிலர் நடத்திய தாக்குதலில் காரின் கண்ணாடி உடைந்தது. அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தரபிரதேச மாநில ஊரக வளர்ச்சித் துறை பாஜக பெண் அமைச்சர் விஜயலட்சுமி கவுதம் என்பவர், சோனுகாட்டில் இருந்து குஷிநகருக்கு, தனது கான்வாய் வாகனங்களுடன் காரில் சென்றார். கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பராசியா பதரி கிராமம் அருகே அமைச்சரின் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென இரண்டு பைக்கில் இளைஞர்கள் காருக்குள் அமர்ந்திருந்த அமைச்சரை நோக்கி கூர்மையான இரும்பு ஆயுதத்தால் தாக்க முயன்றனர்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் காரின் கண்ணாடி உடைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அமைச்சரை காயமின்றி காப்பாற்றினர். தொடர்ந்து அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்திய பராசியா பண்டாரி உள்ளிட்ட சிலர் மீது ஐபிசி 307, 352, 427, 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சதர் ஷ்ரியாஷ் திரிபாதி கூறுகையில், ‘​அமைச்சரின் வாகனம் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக அவர்கள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர் என்பது தெரிவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது’ என்றார்.

Related posts

வயநாடு நிலச்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?: தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!!

ஒலிம்பிக்: பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு..!!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு