பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்

பெரம்பூர்: ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஐடி ஊழியரை கைது செய்து ரவுடியை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் போலீஸ்காரர்கள் சரவணன் (35), ஞானபிரசாத் ஆகியோர் பைக்கில் ரோந்து சென்றுள்ளனர். வியாசர்பாடி ஏ.பி.கல்யாணபுரம் மெயின் ரோடு பகுதியில் வந்தபோது ஏற்கனவே குற்றவழக்குகளில் தொடர்புடைய அந்த பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) அழைத்து விசாரித்தபோது கஞ்சா பொட்டலம் வைத்திருக்கிறார்.

இதனால் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது அஜித்குமார் தனது நண்பர் அகிலேஷ் என்பவருடன் சேர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அங்கு கிடந்த கல்லை எடுத்து போலீஸ்காரர் சரவணன் தலையில் சரமாரியாக அடித்துவிட்டு அஜித்குமார் தப்பிவிட்டார். இதையடுத்து அகிலேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்தனர். போலீஸ்காரர் சரவணன் சிகிச்சை பெறுகின்றார்.

இதுபற்றி அகிலேஷிடம் விசாரித்ததில், ‘’திருச்சி நாவல்பேட்டை பகுதியை சேர்ந்த அகிலேஷ் சென்னை பெருங்குடி பகுதியில் வசித்துக்கொண்டு ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். ரவுடியான அஜித்குமாருடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தியுள்ளார்’ என தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசாரை தாக்கிய வழக்கில் அகிலேஷ் மீது வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Related posts

`சார் போகவேண்டாம், ப்ளீஸ்…’ பணிமாறுதலான ஆசிரியரின் கால்களை பிடித்து கதறிய மாணவிகள்: அரசு பள்ளியில் உருக்கம்

திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது

சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும்; அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை!