அட்சயலிங்கசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா 12ம்தேதி துவக்கம்

 

கீழ்வேளூர்,நவ.7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்கசாமி கோயிலில் பாலசுப்பிரமணிய சாமிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 13ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 15ம்தேதி யானை வாகனத்திலும், 17ம்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. 18ம்தேதி மதியம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை ஆட்டுகிடா வாகனத்தில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி சூரசம்கார நிகழ்ச்சியும், அன்று இரவு மயில் வாகனத்தில் வீதி உலாவும், 19ம்தேதி சரவணப்பொய்கை திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் பூமிநாதன், தக்கார் முருகன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்