வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஆக.29-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரித்து அதனுடைய தாக்கம் மதியம் வரை நீடித்து வந்தது. இதனால் அனல் காற்று வீசி வந்த நிலையில் இந்த நிலையில் மாலை முதல் திடீரென்று குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்கள் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழை காரணமாக கடுமையான வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியதால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் அடுத்த மணி நேரத்தில் சென்னை உள்பட 27 மட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, புதுச்சேரி, சென்னை, வேலூர், தி.மலை, சேலம், திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, குமரியில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி, பொன்னாரம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது

பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Related posts

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு