ஏடிஎம் இயந்திரத்தில் கொட்டிய பண மழை: வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (54). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை 10 மணியளவில் குளச்சல் மெயின் ரோட்டில் வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார். அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று பணத்தை மேலாளரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை வங்கி மேலாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இது குறித்து அந்த வங்கி மேலாளர் கூறுகையில், ‘ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஜெயசந்திரன் செல்வதற்கு முன்பு யாராவது பணத்தை இயந்திரத்தில் டெபாசிட் ெசய்திருக்கலாம். ஏதோ பிரச்னை காரணமாக பணம் உரிய அக்கவுண்டில் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் வாடிக்கையாளர் சென்றிருக்கலாம். அந்த பணம்தான் இவரிடம் கிடைத்துள்ளது. அந்த வாடிக்கையாளரை வரவழைத்து அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்’ என்றார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை