ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டிநாயனப்பள்ளியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் அருகே, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், நேற்று முன்தினம் ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டு சென்றனர்.

இந்நிலையில், அங்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், ஏடிஎம் மையத்தின் வெளியே மற்றும் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மீது, கருப்பு நிற மையை ஸ்பிரே மூலம் அடித்துள்ளனர். பின்னர், காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து, அதிலிருந்த ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை