நவம்பர் மாதம் இறுதிக்குள் வைக்கம் பெரியார் நினைவிடம் சீரமைப்பு பணி முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி அமைச்சர் எ.வ.வேலு பலமுறை கேரளா, வைக்கம் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று வைக்கம் சென்று, சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில், நூலகம் 2582 சதுரடி பரப்பளவிலும், அருங்காட்சியம் 1891 சதுரடி பரப்பளவிலும் அமைந்துள்ளது. ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள், இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் சந்திரமோகன், சிறப்பு அலுவலர் விஸ்வநாத், முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் காசிலிங்கம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறும் பாஜ கூட்டணியில் போட்டியிடும் பாமகவை நிராகரிக்க வேண்டும்: விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

ஒன்றிய அரசின் 3 சட்டங்களை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: ஐகோர்ட்டில் பணிகள் பாதிப்பு

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா வழக்கை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு