சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.17.75 கோடியில் ஏசி ஓய்வு அறை: தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண்.6க்கு அருகில் விமான நிலையத்தில் உள்ளது போல, புதுமையான வசதிகளுடன் ரூ. 17.75 கோடியில் ஏசி ஓய்வு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஓய்வு அறை, கிட்டத்தட்ட 180 பயணிகள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வசதிக்காக 112 ஒற்றை சோபாக்கள் மற்றும் 10 ஓய்வு எடுக்கும் சோபாக்கள் உள்ளன. கூடுதலாக, 18 தனி நபர் படுக்கை, 4 இரண்டு நபர் படுக்கை கொண்டு உள்ளது. மேலும் 34 நாற்காலிகளுடன் சாப்பிடுவதற்கு என தனி பகுதி, அத்துடன் பயணிகள் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய, சைவ மற்றும் அசைவம் தனித்தனியாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிவறைகள் உள்ளன. குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் பிரத்யேக இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இலவச இணையதளம் மற்றும் டீ, காபியுடன் ஒரு மணிநேரம் தங்குவதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில், சிறப்பு வரவேற்பு பானம், இணையதளம், போர்வை, தலையணை மற்றும் படுக்கை ஆகியவற்றுடன் 3 மணி நேரத்துக்கு தூங்குவதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.840 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வசதிகள், காலத்திற்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது