உதவி செயற்பொறியாளர் கல்வி அதிகாரி ஆபீசில் ரெய்டு: ரூ.4 லட்சம் பறிமுதல்

சென்னை: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் ஒரு பகுதியில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த கவுதமன்(55) பணியாற்றி வருகிறார். இவர் அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களிடம் அதிகமாக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் அந்த அலுவலகத்திற்கு சென்று அதிரடியாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அவர்களிடம் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.95 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்கள், 10க்கும் மேற்பட்ட பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள், சுவீட்ஸ் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவர் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முதன்மை கல்வி அலுவலர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். நேற்று காலை மாடர்ன் நகரில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி