மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து பேரவையில் தீர்மானம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பை அடையாளப்படுத்தும் பணி பற்றி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாது அணை கட்டப்பட்டால், உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது