பேரவை கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்: அதிமுக கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவோம் என்று கூறியிருந்தது. இதை செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 45 நாட்கள் நடைபெற வேண்டிய மானியக்கோரிக்கை கூட்டத்தொடரை 8 நாளில் முடிப்பதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.

இடைத்தேர்தலுக்கு பிறகு கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்தலாம் என்றோம். ஆனால் இதற்கு சபாநாயகர் செவிசாய்க்கவில்லை. ஏற்கனவே நிறைய சட்டசபை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு இல்லை. 2004ல் 6 நாட்கள்தான் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது என்று சபாநாயகர் கூறுகிறார். இப்போது எதற்காக பழையதை பேசுகிறார்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்