மிசோரமில் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்: பாஜ, காங். உட்பட அனைத்து கட்சிகள் கடிதம்

அய்சால்: மிசோரம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் தேதியை மாற்றி அமைக்க கோரி மாநிலத்தில் ஆளும் எம்என்எப் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் பாஜ, காங்கிரஸ், சோரம் மக்கள் இயக்கம், மக்கள் மாநாடு கட்சி உள்ளிட்டவையும் கடிதம் எழுதியுள்ளன. டிசம்பர் 3ம் தேதி ஞாயிற்று கிழமை கிறிஸ்தவர்களின் புனித நாள் என்றும், அன்று அனைத்து நகரங்கள், கிராமங்களில் பிரார்த்தனை நடைபெறும் என்றும் எனவே வாக்கு எண்ணும் தேதியை டிசம்பர் 4ம் தேதிக்கு மாற்றும்படியும் அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து