சட்டசபை பேச்சை அச்சடித்து விநியோகம்: கேரள முதல்வர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

திருவனந்தபுரம்: சட்டப்பேரவை பேச்சை அச்சடித்து வீடு வீடாக விநியோகிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர் மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் செய்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், எம்பியுமான டி.என். பிரதாபன் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது: கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசிய பேச்சை 16 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சடித்து வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானதாகும்.

எனவே முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர் வேணு மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் சுபாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்