அசாமில் ரூ.27,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலை

கவுகாத்தி: அசாமியின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோட்டில் ரூ.27,000 கோடியில் அமைய உள்ள செமிகண்டக்டர் அசெம்பிள் மற்றும் சோதனை ஆலைக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் குஜராத்தில் அமைய உள்ள 2 ஆலைகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாம் வலுவான அடி எடுத்து வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இது. மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் நாட்டை தன்னம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ’’ என்றார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்