அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

அசாம்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

அண்மை காலமாக உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பெரும்பாலான பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்டை நாடான சீனாவில் கன்சூ மற்றும் கிங்காய் நகரங்களில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து நேற்று ஜம்முகாஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் நள்ளிரவு 1.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது. இதேபோல் லடாக்கின் லே பகுதியில் அதிகாலை 4.33 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்