அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு !!

அசாம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.ஜோராபாட் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேச ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கவுகாத்தி நகருக்குள் பயணம் செல்லவும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.தடுப்புகளை அமைத்தும் தடுத்தி நிறுத்தினர்.போலீசாரின் தடுப்புகளை மீறி காங்கிரஸ் தொண்டர்கள் செல்ல முற்பட்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே தொண்டர்கள் கூட்டத்தை வன்முறைக்கு தூண்டிவிட்டதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாக அசாம் மாநில முதல்வர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், அமைதியான மாநிலமான அசாமிற்கு நக்சலைட் பாணியிலான செயல்பாடுகள் அநியாயம் ஆனவை என தெரிவித்துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதால் கவுகாத்தியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வழிவகுத்துள்ளதாகவும் ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு