மதுரை: மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ளதை அடுத்து நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.