ஆசிய கோப்பை டி 20 மகளிர் கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு தம்புல்லாவில் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து -வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்தது. தாய்லாந்து அணி வங்கதேச வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் 40 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களையே சேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட், சபிகுன் நஹர் ஜெஸ்மின், ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன், முர்சிதா கதுன் 50 ரன், இஷாமா தன்ஜிம் 16 ரன் சேர்த்தனர்.

Related posts

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை!

ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிய Gym பயிற்சியாளர் கைது!

வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!