இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம், எதிர்மறை கருத்துகளை தவிர்ப்போம் : அஸ்வின் கோரிக்கை

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வென்றதில்லை. கடந்த 2013ம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா ஐசிசி கோப்பையை வென்றது. அதாவது கடைசியாக இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதே நேரத்தில், தோனியின் தலைமையில் இந்தியா இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை 2017 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2011-ஐ வென்றது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய அணி பந்து வீச்சாளரான அஸ்வின், “10 ஆண்டுகளாக இந்தியா ஐசிசி டிராஃபி ஜெயிக்கவில்லைதான்.

ஒவ்வொரு தொடருக்குள் செல்வதற்கு முன், “இந்தியாகிட்ட ஐசிசி டிராஃபி இல்ல” என இதையே தொடர்ந்து சொல்கிறார்கள்; 1983, 2007, 2011, 2013 என இவ்வளவு கோப்பைகள் வைத்திருக்கிறோமே, இருப்பதை வைத்து சந்தோஷப்படுவோம் கிரிக்கெட் விளையாடும் நாடாக எந்த அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்; இது நமது சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் நாம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது!எனவே, இந்த தருணம் முதல், இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம், எதிர்மறை கருத்துகளை தவிர்ப்போம்; இதுவே ஒரு கிரிக்கெட் வீரராகவும், விளையாட்டின் ரசிகராகவும் நான் வைக்கும் கோரிக்கை”,எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!