ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் மேலும் ஒரு தங்கம்… இதுவரை 23 தங்கப்பதக்கங்களை வென்றது இந்திய அணி!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபேயுடன் மோதியது.

இதில் இந்திய அணி 230-228 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.இதையடுத்து ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் ஜோடி, மலேசியா ஜோடியை 2-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.இதனிடையே மதியம் நடைபெறும் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 50, 53, 57 மற்றும் 130 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

சென்னையில் வரும் ஜூலை 7-ம் தேதி மகளிருக்கான கார் பேரணி!

சிதம்பரம் அருகே உள்ள பள்ளியில் மதிய உணவு அருந்திய 25 மாணவர்களுக்கு லேசான மயக்கம்

சிவந்த இதழ்கள்!