புழுதிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வழங்கினார்

ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை 76 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வழங்கினார்.சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் தந்தை பெரியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெருங்குடி மண்டல குழுத்தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மாமன்ற கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், உதவி தலைமை ஆசிரியர் டில்லிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ பங்கேற்று, 76 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் முரளி, திமுக நிர்வாகிகள் ரகு, யோகராஜன், க.ராமு, சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு