சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த திடீர் முடிவு!

டெல்லி: சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாா்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

கடந்த ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் டெல்லி உயா்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அப்போது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் சிபிஐ கைது செய்ததாக கூற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் சிபிஐ கைது செய்ததை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related posts

போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்