டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வர இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சியுமான கே.கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் இதையடுத்து தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் முன்னதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின் படி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் கேட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவானது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று விசாரணை வந்தது.

அப்போது; கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. மேலும் கெஜ்ரிவாலின் ஜாமின் உத்தரவை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை உடனே விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. அதனை ஏற்ற நீதிபதிகள் இந்த மனுவை இன்று விசாரித்தனர், அப்போது ED மனுவை விசாரித்து முடிக்கும் வரை விசாரணை நீதிமன்றம் தந்த ஜாமீனை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!