அருணாச்சலில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் பாதிப்பு

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பிரதான ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு காமெங் மாவட்டத்தின் செப்பாவில் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. தலைநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. கார் ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். நேற்று முன்தினம் முக்கியமான குரூங் குமே மாவட்டத்தில் உள்ள குரூங் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நாம்சாய் மாவட்டத்தல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றங்கரையோரங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் ஆறு மற்றும் அதனை கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்