அருமனை அருகே சட்டவிரோத மது விற்பனையை அம்பலப்படுத்திய பொதுமக்கள்

*வீடியோ வைரல்

அருமனை : அருமனை அருகே படப்பை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பார் ஒன்றில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக எழுந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் மது விற்றதாக மஞ்சாலுமூடு தோட்டத்துவலை பகுதியை சேர்ந்த கோபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் மது விற்ற மஞ்சளோடு தோட்டத்துவலை மணி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருந்த போதும் சட்ட விரோத மது விற்பனை தொடர்ந்து நடந்து வந்தது.

படப்பச்சை தனியார் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை அப்பகுதி இளைஞர்கள் நேற்று படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் அருமனை காவல் நிலையத்தில் இது பற்றி அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதிகாலையிலே வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்களுக்கு மது கொடுத்து அவர்கள் குடும்பத்தை தள்ளாட வைக்கும் பாருக்கு சீல் வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர்.

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு