ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் சென்னை கொண்டு வரப்படுகிறார்: துபாய் விரைகிறது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டில் கைதான ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் துபாய் செல்ல உள்ளனர். சென்னை ஆருத்ரா நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேர் ரூ.2,348 கோடி செய்து அதன் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜசேகர் ஆகிறோர் நிறுவனத்தை மூடிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.

முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் அளித்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆருத்ரா இயக்குநர்களாக இருந்த பாஸ்கர், ஏஜெண்ட் ரூசோ உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அவரது மனைவி உஷா ராஜசேகர் ஆகியோரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

இதற்கிடையே பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒன்றிய வெளியுறபுத்துறை அமைச்சகம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஐக்கிய அரபு அமீரகம்( யுஏஇ) நாட்டின் போலீசார் உதவியுடன் இன்டர்போல் போலீசார் கடந்த 30ம் தேதி உள்ள அபுதாபியில் கைது செய்தனர். இதற்கிடையே ராஜசேகர் மீது உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை துபாய் நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒன்றிய அரசு உதவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொருளாதார குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் விரைவில் துபாய் செல்ல உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆருத்ரா முக்கிய ஏஜெண்டான ரூசோ விடம் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.15 கோடி பணம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரின் படி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இன்று நீதிமன்றம் உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!