ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஐஜி ஆசியம்மாள் விளக்கம்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணை பற்றி ஐஜி ஆசியம்மாள் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி உஷாவை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ரூ.6.35 கோடி, ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு