கலைத் திறமைகளை வெளிப்படுத்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஓவிய, சிற்பக்கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக் காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் தன் விவரக் குறிப்பு சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள், அவரவர்களின் படைப்புத் திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், 2ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008. தொலைபேசி 044-28193195 பின்வரும் முகவரிக்கு ஜூலை 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை