கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7 கோடியில் மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.7 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ராஜாஜி மார்க்கெட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மிகவும் பழமையான ராஜாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டின் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டி மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்தது.

இப்பணிகள் முழுவதும் தற்போது முடிவுற்று அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதன்படி, ரூ.7 கோடியில் மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்ட ராஜாஜி மார்க்கெட்டில் 248 கடைகள், உணவகங்கள், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, ராஜாஜி மார்க்கெடை குத்துவிளக்கேற்றி காய்கறி, பழங்கள் உள்ளிட்ட வியாபாரம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மண்டல தலைவர்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், சாந்தி சீனிவாசன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,

மாவட்ட பொருளாளர் சண் பிரண்ட் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், மாநகர நிர்வாகிகள் கே.ஏ.செங்குட்டுவன், முத்து செல்வன், ஜெகநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், த.விஸ்வநாதன், மலர்கொடி தசரதன், கமலக்கண்ணன், கார்த்திக் ,ஆணையர் நவீந்திரன், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…