கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக ரூ.2 லட்சத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தக கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ. 4 கோடியிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 5 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 இரண்டு லட்சத்தினை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ. 5 கோடியே 73 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று ரூ. 2 லட்சத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related posts

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்