பீரங்கி குண்டு வீச்சு; வட, தென் கொரியா இடையே போர் பதற்றம்

சியோல்: தென் கொரியா மற்றும் வடகொரியா இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லையில் நேற்று முன்தினம் வடகொரியா சுமார் 200 பீரங்கி குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தியது. இதற்கு பதிலடியாக 2 எல்லைத் தீவுகளில் தென் கொரிய படையினர் 400 பீரங்கி குண்டுகளை வீசி ஒத்திகை செய்தனர். இந்நிலையில், 2வது நாளாக நேற்று மீண்டும் வடகொரியா பீரங்கி குண்டுகளை ஏவி உள்ளது. இது குறித்து தென் கொரியாவின் முப்படை தலைவர் விடுத்த அறிக்கையில், ‘மேற்கு கடல் எல்லைக்கு அருகே வடகொரியா 60 ரவுண்டுகள் சுட்டு சிறிய ரக பீரங்கி குண்டுகளை ஏவி உள்ளது.

வடகொரியாவின் முந்தைய ஒத்திகைக்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம். தென் கொரிய மக்களுக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்து பீரங்கி ஒத்திகையில் ஈடுபட்டால் அதற்கான ராணுவ நடவடிக்கையை தென் கொரியா மேற்கொள்ளும்’ என எச்சரித்துள்ளார். இதனால் தென் கொரியா, வடகொரியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு