கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ’ஓவியச் சந்தை’

சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 2.8.2024, 3.8.2024 மற்றும் 4.8.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏதுவாக, தாங்கள் காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள கலைப்படைப்புகளின் விவரங்கள், அதற்குரிய புகைப்படங்கள், கலைப் படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை 23.7.2024-க்குள், முதல்வர்(பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, ஈ.வே.ரா.பெரியார் சாலை, சென்னை-600 003. தொலைபேசி எண்.044-25610878 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related posts

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து

விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை