புதிய பைக்கில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

மாதவரம்: கொடுங்கையூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கொடுங்கையூர் – தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன எண் பதிவு செய்யப்படாத புதிய பைக் ஒன்று வந்தது. அதனை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பைக்கை ஓட்டி வந்த கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்த அரவிந்தன் (23) மற்றும் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 6வது தெருவைச் சேர்ந்த கோபால் (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அரவிந்தன் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது கேரளாவைச் சேர்ந்த மில்க்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து அவர் மூலமாக அரவிந்தன் கஞ்சாவை வாங்கி வந்து அதனை வட சென்னையில் பல்வேறு பகுதியில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கோபால் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது