சேலம் அருகே மான் தோலில் அமர்ந்து நள்ளிரவில் பூஜை செய்த மதுரை சாமியார் உட்பட 4 பேர் கைது

சேலம்: சேலம் அருகே மான் தொழில் அமர்ந்து நள்ளிரவில் பூஜை செய்த மதுரை சாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் அடுத்துள்ள ஓமலூர் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கணேஷ் ஆந்தசாமி. அவர் மான் தோலின் மீது அமர்ந்து மந்திரம் சொல்வது, சுருள் வாக்கு சொல்வது என சாமியாராக வளம் வந்துள்ளார்.

சாமியார் கணேஷ் ஆந்தசாமி இரவில் தனது சீடர்களுடன் மான் தோலில் அமர்ந்து பூஜை செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சாமியாருக்கு மான் தோல் எப்படி கிடைத்தது, அது வேட்டையாடப்பட்ட மானின் தோலா என சிலர் கேள்வி எழுப்பினர். அதுபற்றியும், சாமியார் நடத்தும் நள்ளிரவு பூஜை பற்றியும் மாவட்ட வன அலுவலர் மற்றும் டேனிஷ் பேட்டை வனத்துறையினருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து டேனிஷ் பேட்டை அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர் தேர்முட்டு காட்டுப்பகுதிக்கு தடாலடியாக சென்றனர். அப்போது கணேஷ் ஆந்தசாமி மான் தோலை வைத்தும் அதன் மீது அமர்ந்தும் சீடர்கள் துணையுடன் பூஜை செய்வது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பயன்படுத்திய மான் தோலையும் பறிமுதல் செய்தனர்.

மதுரையை சேர்ந்த கணேஷ் ஆந்தசாமி தீவிர விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டார். அப்போது மான் தோலில் அமர்ந்து போக்கை செய்தால் பலிக்கும் என சாமியார் கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு மான் தோல் எப்படி கிடைத்தது எப்படி. எங்கு யாரிடம் வாங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய வனத்துறையினர், பின்னர் அவரை கைது செய்தது. மேலும் சாமியாருக்கு துணை போன சீடர்கள் 4 பேருக்கும் தலா ரூ.30,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!